வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (08:42 IST)

நேற்று தேர்தல் நடந்த மேகாலயாவில் இன்று நில அதிர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Meghalaya
நேற்று சட்டமன்ற தேர்தல் நடந்த மேகாலயா மாநிலத்தில் இன்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். நேற்று மேகாலயா நாகலாந்து உள்பட ஒரு சில மாநிலங்களிலும் ஈரோடு கிழக்கு உட்பட ஒரு சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெற்றது என்பதை பார்த்தோம். மேகாலயா மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில் 82 சதவீத வாக்குப்பதிவு நடந்தது என்பது வரும் மார்ச் இரண்டாம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று தேர்தல் நடந்த மேகாலயா மாநிலத்தில் இன்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதி மக்களுக்கும் அச்சமடைந்துள்ளனர்.
 
மேகாலய மாநிலத்தில் உள்ள துரா என்ற நகரில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு நிகழ்ந்ததாகவும் ரிக்டர் அளவில் இது 3.7 என பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இந்த நில அதிர்வு காரணமாக எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்றாலும் பொதுமக்கள் அச்சத்துடனே இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva