புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 28 ஜனவரி 2022 (15:28 IST)

பத்மபூஷன் விருது: ஜனாதிபதி, பிரதமருக்கு நன்றி தெரிவித்த மைக்ரோசாப்ட் சி.இ.ஓ

சமீபத்தில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா அவர்களுக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பத்மபூஷன் விருது பத்மபூஷண் விருது ஆகியவை அறிவிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது 
 
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
தொழில்நுட்பம் மூலம் பலவற்றை சாதிக்க இந்தியாவில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து பணியாற்ற காத்திருக்கின்றேன் என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்