செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (07:31 IST)

திருப்பதி மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை.. என்ன காரணம்?

tirupathi
திருப்பதி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த தடை விதிக்கும் வகையில், 30 ஆவது காவல் சட்டத்தின் 30-வது பிரிவு மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் உள்ள திருமலையில், ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக பெரும் சர்ச்சை நிலவிய நிலையில், இதுகுறித்து அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், திருப்பதியில் ஏற்பட்ட லட்டு விவகாரம் குறித்து ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தற்போதைய துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட சிலர், திருமலைக்கு பாதயாத்திரையாக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 30 ஆவது பிரிவு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி, திருப்பதி மாவட்டம் முழுவதும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதிக்கப்படும். அக்டோபர் 2-ஆம் தேதி வரை இந்த சட்டம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva