முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராமர் கோவில் கட்ட போங்க: மாயாவதி ஆவேசம்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராமர் கோயில் கட்டும் பணிகளில் ஈடுபடலாம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ராஸ் சென்ற பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உத்தரப்பிரதேச அரசுக்கும் காவல்துறைக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் மாநில முதல்வர் பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் ராமர் கோயில் கட்டும் பணியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்
மேலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு முழுக்க முழுக்க ராமர் கோயில் கட்டும் பணிகளில் ஈடுபடலாம் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து தீவிரமாக விசாரணை செய்ய காவல்துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது