ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

பி.ஆர்க் படிப்பிற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் கட்டாயமா? அதிரடி அறிவிப்பு

பி.ஆர்க் படிப்பிற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் கட்டாயமா? அதிரடி அறிவிப்பு
பி.ஆர்க் எனப்படும் கட்டிடக்கலை படிப்பிற்கு இயற்பியல் வேதியியல் மற்றும் கணிதம் பாடங்கள் படிப்பது கட்டாயம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது 
 
பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல் வேதியியல் கணிதம் படித்தவர்கள் மட்டுமே கட்டடக்கலை தொடர்பான படிப்பு படிக்க முடியும் என்ற நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது 
 
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் பி.ஆர்க், பேஷன் டெக்னாலஜி, பேக்கேஜிங் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் இயற்பியல் வேதியியல் கணிதம் தேவையில்லை என்று அறிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது