திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (15:04 IST)

கல்யாணமே புடிக்கல.. கேஜிஎப் டயலாக்கை உல்டா அடித்து பத்திரிக்கை!

Invitation
யஷ் நடித்த கேஜிஎஃப் 2 படத்தின் வசனத்தை மாற்றியமைத்து அச்சிட்டுள்ள திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் கேஜிஎஃப் 2. இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் இந்த படத்தின் வசனங்களும், பாடல்களும் பலருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அந்த படத்தில் ராக்கி பாய் டேஞ்சர் போர்டை நிமிர்த்தி வைத்துவிட்டு “எனக்கு வன்முறை பிடிக்காது.. ஆனால் வன்முறைக்கு என்னை பிடிக்கும். அதனால் என்னால் தவிர்க்க முடியாது” என ஆங்கிலத்தில் வசனம் பேசுவார்.

அந்த புகழ்பெற்ற வசனத்தை திருமண பத்திரிக்கை ஒன்றில் “எனக்கு திருமணம் பிடிக்காது. ஆனால் என் சொந்தக்காரர்களுக்கு பிடிக்கும். அதனால் என்னால் தவிர்க்க முடியாது” என்று மாற்றி அச்சிட்டு வைரலாக்கியுள்ளனர்.