Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விருந்தில் மாட்டிறைச்சி இல்லாததால் நின்றுபோன திருமணம்


Abimukatheesh| Last Updated: சனி, 17 ஜூன் 2017 (21:58 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண விருந்தில் மாட்டிறைச்சி இல்லை என திருமணம் நின்றுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
உத்தரபிரதேச மாநிலம் தரியாகார் என்ற கிராமத்தில் நடக்க இருந்த திருமண விருந்தில் மாட்டிறைச்சி இருக்க வேண்டும் அல்லது திருமணத்தை நிறுத்த வேண்டும் என மணமகன் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். இதற்கு மணமகள் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் திருமணம் நின்றுபோனது. 
 
மணமகன் குடும்பத்தினர் கண்டிப்பாக கூறியதை தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மணமகன் வீட்டார் வரதட்சனையாக கார் கேட்டதாகவும் அதை மணமகள் வீட்டார் மறுப்பு தெரிவித்ததும் திருமணம் நின்று போனதற்கு காரணம் என கூறப்படுகிறது. 
 
இதையடுத்து மணமகள் வீட்டார், மணமகன் குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி மணமகன் வீட்டார் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :