புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (10:11 IST)

இந்தி திணிப்பு – முன்னாள் நீதிபதியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

புதிய கல்விக் கொள்கையின் மூலம் மீண்டும் இந்தி திணிக்கப்படுவதாக கருத்துகள் தென் இந்தியாவில் எழுந்துள்ளன.

மத்திய அரசு கொண்டுவர இருக்கும் புதிய கல்விக்கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கை தென்னிந்தியாவில் பலமான எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. இதன் மூலம் மீண்டும் இந்தியும் , சமஸ்கிருதமும் மக்கள் மீது திணிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இது பற்றி சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் ‘ஏன் இந்தி மற்ற மொழிகளை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? மிகவும் எளிமையான விடை.. மற்ற எந்த மொழிகளை விட 20 சதவீதம் அதிகமான மக்களால் அது பேசப்படுகிறது’ எனக் கூறியிருந்தார். இதையடுத்து பலரும் அவரது கமெண்ட்டுக்கு கீழ் ‘இந்தியாவில் சாலைகளெங்கும் நாய்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால் அது தேசிய விலங்காகிவிடுமா? புலிதானே’ எனவும் ‘இந்தியாவில் 75 சதவீதம் மக்கள் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். அதனால் அதை மற்ற 25 சதவீதம் பேரையும் அசைவ உணவு சாப்பிட நாம் வற்புறுத்தலாமா?’ எனக் கேட்டுள்ளனர்.

மற்றுமொருவர் ‘நீதிபதிகளை விட குற்றவாளிகள் அதிகமாக உள்ளனர். அதனால் நீதிபதிகளை சிறையில் தள்ளிவிட்டு நாம் படிப்பதை நிறுத்திவிட்டு குற்றவாளிகள் ஆகிவிடுவோமா?’ எனவும் கேட்டுள்ளார். இது சம்மந்தமான ஸ்க்ரீன்ஷாட்டுகள் இணையத்தில் பரவி வருகின்றன.