1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 13 செப்டம்பர் 2014 (18:01 IST)

பீகாரில் போலீசாரால் தேடப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் கைது

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் இன்று கைது செய்யப்பட்டார்.
 
மாவோயிஸ்ட் இயக்கத்தின் துணை மண்டல கமாண்டராக செயல்பட்டு வந்தவர் ராம் பர்வேஸ் யாதவ். இவர் மீது கொலை, வன்முறை தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
 
பள்ளிகள், செல்போன் கோபுரங்களை தீயிட்டு கொளுத்துவது, சாலைபோடும் எந்திரங்களுக்கு தீ வைப்பது, ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த யாதவ், டின்கிராகி பகுதியில் இன்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
இதேபோல் பாகல்பூர் மாவட்டம் தர்காரா பகுதியில் இன்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு செங்கல் சூளை அருகே தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியபோது அவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.