வரிசைக்கட்டி வரும் பண்டிகைகள்... விர்ரென உயர்ந்த விமான கட்டணங்கள்!
சமீப காலமாக விமான பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதிலும் பண்டிகை நாட்கள் என்றால் சொல்ல வேண்டியதே இல்லை. விமான முன்பதிவுகள் நிரம்பி வழியும். எனவே விமான நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்தி விமான கட்டணங்களை உயர்த்திவிடும். மேலும் நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் தற்போது விமான சேவை உள்ளது.
இந்த வருடம் தீபாவளி நவம்பர் 12-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால் உள்ளூர் விமானங்கள் பலவற்றில் விமானக் கட்டணம் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் சென்ற வருடம் தீபாவளிக்கு இருந்த விமான கட்டணங்களைவிட இந்த வருடம் மிகவும் அதிமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் புத்தாண்டு கொண்டாடத்திற்கும் இப்போது இருந்தே முன்பதிவு தொடங்கியுள்ளது. பலரும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல தொடங்கியுள்ளதால் விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தாலும் பெரும்பாலான விமானங்களில் முன்பதிவுகள் நிரம்பிவிட்டது. இதற்கு விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிரிப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.