1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 மே 2020 (10:17 IST)

மன்மோகன் சிங்கிற்கு கொரோனா சோதனை: ரிசல்ட் என்ன?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கிற்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.  
 
ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவரை ஐசியுவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தகவல். 
 
மேலும், தற்போது கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா இல்லை, அவரது கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.