திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 4 மே 2023 (18:48 IST)

மணிப்பூரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை கண்டதும் சுட ஆளுனர் உத்தரவு

Manipur
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுப்பட்ட  நிலையில் அது வன்முறையாக வெடித்துள்ள நிலையில்,  மாநில ஆளுனர் கலவரத்தைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில்  பிரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறாது. இங்கு, மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடி( எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும், என்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் ஒற்றுமை ஊர்வலம் நடத்தினர்.

எதிர்பாராத விதமான இந்த ஊர்வலத்தின்போது, வன்முறை வெடித்தது. டோர்பாங் என்ற பகுதியில், பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அங்குள்ள 8 மாவட்டங்களில்  புதன்கிழமையன்று ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.  இணையதளம், மற்றும் மொபைல் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் மற்றும் அசாம்  ரைபிள்ஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அம்மாநில கவர்னர்   கலவரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளார்.