1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : சனி, 13 பிப்ரவரி 2016 (13:07 IST)

காதல் ஜோடி எங்கே?: மண்டம், சாமியார் எல்லாம் ரெடி... டும்... டும்... டும்...

காதலர் தினம் ஒன்று வந்துவிட்டால், சில காதலர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனால் சில தெய்வீக காதலர்களுக்கு சத்திய சோதனை தான்.


 
 
தெய்வீகமா லவ்வாகில இருக்கும் போது, நம்ம பரவச நிலையை கலைக்க எந்த பக்கத்திலிருந்து யார் வருவா, தாலிய நீட்டிட்டு கட்டுடானு நம்மல சத்திய சோதனைல யார் கொண்டு விடுவானு தெரியாது. அப்படி ஒரு பயம் காதலர்களுக்கு.
 
காரணம் கடந்த சில வருடங்களாக காதலர் தினமன்று, நாங்கள் தான் இந்தியாவின் கலாச்சார பாதுகாவலர்கள் என பீத்திக்கொள்ளும் சில அமைப்புகள் பொங்கி எழுவார்கள். அன்று அவர்கள் ஆற்றும் களப்பணியில் ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிடுவார்கள்.
 
இந்த வருடம் ஜார்கண்டில் கொஞ்சம் வித்தியாசமாக இவர்கள் களப்பணியாற்ற உள்ளனர். மண்டபம், சாமியார், திருமணம் செய்து வைக்க தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் தயாராக வைத்துள்ளனர்.
 
காதலர் தினம் வந்ததும் மஞ்ச தண்ணியை ஊற்றி ஆட்டை வெட்டுவதை போல, பார்க், ஹோட்டல், சினிமா தியேட்டர் என கண்ணுல படும் காதலர்களை அப்படியே அல்லாக்க தூக்கி ஏற்பாடு செய்து வைத்துள்ள இடத்துக்கு கொண்டு வந்து, டும்.... டும்... டும்... நடத்திட வேண்டியது தான்.
 
இதற்காக இவர்கள் பல குழுக்களை அமைத்துள்ளனர். குழுவுக்கு 10 பேர் வீதம் உள்ளனர். மைக் ஓன், மைக் டூ, மைக் த்ரீ... எல்லாரும் ரெடியா? கம் ஆன் ஆப்பரேஷன ஆரம்பிங்க.
 
காதலர்கள் மைண்ட் வாய்ஸ்: கடவுளே உனக்கு இரக்கமில்லையா? எத்தனை நாள் நாலன்னா கற்பூரத்தை வாங்கி நாள் முழுதும் தெய்வீக காதல் பண்ணியிருக்கேன்.