கழிவறை கட்ட நிதி கேட்டவரை காரில் தொங்கவிட்ட அதிகாரி - அதிர்ச்சி வீடியோ

Last Modified வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (12:29 IST)
தன்னுடைய வீட்டில் கழிவறை கட்ட பணம் கேட்டு போராட்டம் நடத்திய ஒருவரை, சம்பந்தப்பட்ட அதிகாரி காரின் முன்பு தொங்கவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கழிவறை கட்ட நிதி கேட்டு ஒருவர் அரசிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், பல நாட்கள் ஆகியும் அவருக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தியுள்ளார். 
 
இதனால் கோபமடைந்த அந்த அதிகாரி, போராட்டத்தில் ஈடுபட்டவரை தனது காரின் முன்பு தொங்கவிட்டவாறு காரை நீண்ட தூரம் ஓட்டி சென்றுள்ளார். மேலும், காரில் இருந்த ஒருவர் வீடியோவும் எடுத்துள்ளார்.
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. போராட்டம் நடத்தியவர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :