வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2017 (14:26 IST)

உயிரிழந்த சிறுமியின் உடலை சைக்கிளில் தூக்கி சென்ற வாலிபர் - தொடரும் அவலங்கள்

அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமியின் உடலை எடுத்து செல்ல வாகனம் தராததால், அந்த சிறுமியின் உறவினர், சடலத்தை தனது தோழில் சுமந்து சைக்கிளில் சென்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்தரபிரதேச மாநிலத்தில் கும்சாம்பி எனும் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு சிறுமி சமீபத்தில் கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டாள். இதையடுத்து ஒரு அரசு மருத்துவமனையில் அந்த சிறுமியை சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி சமீபத்தில் மரணமடைந்தாள். இதையடுத்து, சிறுமியின் உடலை எடுத்து செல்ல வாகனம் தருமாறு சிறுமியின் மாமா கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்குமாறு அங்கிருப்பவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் பணம் இல்லை. எனவே, அவருக்கு ஆம்புலன்ஸ் கொடுக்க அந்த மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.
 
இதையடுத்து, சிறுமியின் உடலை தோளில் சுமந்தவாறு, தன்னுடய சைக்கிளில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரமுடைய வீட்டிற்கு அவர் கொண்டு சென்றுள்ளார். 
 
கையில் வைத்திருந்த பணத்தை சிறுமியின் சிகிச்சைக்காக செலவு செய்து விட்டோம், எனவே, மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வண்டிக்கு பணம் கேட்டபோது பணம் கொடுக்க முடியவில்லை. உயிரிழந்த பின்னர் இப்படி பணம் கேட்டால் நாங்கள் என்ன செய்வோம்? என அவர் வேதனையுடன் கூறினார்.
 
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.