திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (07:13 IST)

கொலை செய்து சடலத்துடன் உறவு – குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை !

மும்பையில் பிஸியோதெரபிஸ்டைக் கொலை செய்து அவரது சடலத்துடன் உடலுறவு வைத்துக்கொண்ட நபருக்கு மும்பை நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துள்ளது.

மும்பை வசித்து வந்த அந்த பிஸியோ தெரபிஸ்ட் பெண் அன்றிரவு வீட்டின் கீழ்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரின் வீட்டுக்கு அருகில் வசித்து வரும் நகைக்கடை ஊழியரான தேபாஜிஸ் தாரா என்ற இளைஞன் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரைப் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதை எதிர்த்த அந்த பெண்ணைக் கொலை செய்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணின் உடலோடு பாலியல் வல்லுறவு மேற்கொண்டுவிட்டு அவரின் உடலை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.

இதையடுத்து மறுநாள் காலை அந்த பெண்ணின் பெற்றோர் வீட்டுக்கு வந்து பெண்ணின் இறந்த உடலைப் பார்த்து அதிர்ந்து போலிஸில் புகாரளிக்க போலிஸ் தீவிர விசாரணை நடத்தி தேபாஜிஸை கண்டுபிடித்துள்ளனர். இது சம்மந்தமான வழக்குக் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது தேபாஜிஸுக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது மும்பை நீதிமன்றம்.