மனைவியின் கண் எதிரிலேயே ரயிலில் பாய்ந்த கணவன்..


Murugan| Last Modified செவ்வாய், 27 டிசம்பர் 2016 (15:28 IST)
ரயில்வே தண்டவாளத்தில் மனைவியிடன் செல்பி எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி விட்டு, ரயிலில் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
மும்பை, தானே மாவட்டம் வாஷிந்த் தாம்பே என்ற கிராமத்தில் வசிப்பர் விஷால்(25). இவரின் மனைவி  வைஷ்ணவி(21). இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தையும் உள்ளது. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
 
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவியை அழைத்துக் கொண்டு கடவலி-வாஷந்த் ரயில் நிலையங்களுக்கிடையே தனது மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது தனது மனைவியுடன் செல்பி எடுத்து, தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அவர் அனுப்பினார்.
 
அப்போது அங்கு ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. அதன்பின் மனைவியை கீழே தள்ளி விட்டு அவர் ஓடும் ரயிலின் முன் பாய்ந்தார். அதில் அவர் உடல் சிதறி பலியானார். தன்னுடைய கண் முன்னாலேயே தனது கணவன் தற்கொலை செய்து கொண்டதால், அதிர்ச்சியில் அவரி மனைவி கதறி அழுதார்.
 
அவரின் உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இறப்பதற்கு முன் விஷால், தன்னுடைய செல்போனில் இருந்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அவர் ஒரு ஆடியோ செய்தியை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியுள்ளார். அதில், சச்சின் வெகண்டே மற்றும் அருண் சாத்வி என்ற 2 பேர், அவரை பல வழிகளில், தொல்லை தருவதால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறியிருந்தார்.
 
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசர், அவர்கள் 2 பேரையும் கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :