செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (08:13 IST)

ரயில் முன் பாய்ந்த இளைஞர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் !

மும்பையில் உள்ள குர்லா ரயில்நிலையத்தில் ரயிலுக்கு முன் பாய்ந்த ஒருவர் உடல் சிதறி தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மும்பை புறநகர் பகுதியில் குர்லா ரயில் நிலையம் அமைந்துள்ளது. அப்போது ரயிலின் வருகைக்காக பயணிகள் சூழ காத்திருந்தபோது ரயில், ஸ்டேஷன் நோக்கி வந்தது. இதனால் பயணிகள் அனைவரும் அதில் ஏற ஆயத்தமானார்கள். அப்போது கூட்டத்தில் இருந்து முன்னே வந்த ஒருவர் அங்கு தண்டவாளத்தில் குதித்து தலைவைத்துப் படுத்துகொண்டார்.

இதில் ரயில் அவர் மேல் ஏறி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதனால் பயணிகள் அலறியடித்து ஓட பதற்றமான சூழல் உருவானது. சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி மக்களை பதைபதைக்க வைத்துள்ளது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதித்தது.