1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 மே 2024 (14:56 IST)

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறது என்று நான்கு கட்ட தேர்தல் முடிந்த பிறகு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிதெரிவித்துள்ளார்
 
 இன்று அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் ஒரு அங்கம் என்றும் இந்தியா கூட்டணியை என்னுடைய சிந்தனையில் உருவானது என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணியில் இல்லை ஆனால் அதே நேரத்தில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறோம். அந்த கூட்டணி இனியும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்
 
மம்தா பானர்ஜியின் இந்த  பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணியில் சேர்க்காமல் அவர்களுக்கு எதிராக வாக்கு பெற்று ஆனால் தேசிய அளவில் மட்டும் எப்படி ஒரே கூட்டணியில்  இணைய முடியும் என்ற கேள்வியை அரசியல் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர் 
 
இதே நிலைதான் கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva