வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (21:57 IST)

நெற்றியில் சொட்ட சொட்ட ரத்தம்..! மம்தாவுக்கு என்ன ஆச்சு..?

mamtha
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெற்றியில் ரத்தத்துடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மம்தா பானர்ஜி விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக அக்கட்சி X தளத்தில் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
 
அதில் அவர் நெற்றி உள்ளிட்ட முகம் முழுவதும் ரத்தம் கசிந்து ஓடும் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த பதிவில் மம்தா பானர்ஜிக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்த புகைப்படத்தில் மம்தா பானர்ஜியின் நெற்றியில் வெட்டுக்காயம் உள்ளதால் அவரது கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
cm stalin
முதல்வர் ஸ்டாலின் வருத்தம்:
 
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் காயமடைந்ததை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் மம்தா விரைவில் குணம்பெற வேண்டும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.