வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (14:11 IST)

நான் ஏன் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்லவில்லை: மல்லிகார்ஜூனே விளக்கம்..!

mallikarjuna karka
ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தும் நான் ஏன் செல்லவில்லை என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே  விளக்கம் அளித்துள்ளார் 
 
நான் தலித் என்பதால் அந்த கோவிலுக்கு நான் சென்றால் அவமானப்படுத்தப்படுவேன் என்று பயந்தேன் என்றும் நான் சென்று வந்த பிறகு அந்த கோயிலை தூய்மைப்படுத்துவார்கள் என்றும் அது எனக்கான அவமானம் என்றும் அதனால் தான் நான் கோவிலுக்கு செல்லவில்லை என்றும் மல்லிகார்ஜூனே தெரிவித்தார் 
 
குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என்றும் அதேபோல் ராமர் விழா கோயில் திறப்பு விழாவுக்கு அழைக்கப்படவில்லை என்றும் அது ஏன் என்றும் அவர் கேள்வி அனுப்பினார் 
 
ஜாதி மதம் சமூகத்தை தாண்டி மோடியை தோற்கடிக்க வேண்டும் என்றும் பாஜகவுக்கு கட்டுப்படாத முதல்வர்களை சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம் என்றும் எனவே காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளியுங்கள் என்றும் அவர் பேசினார் 
 
Edited by Mahendran