வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (12:42 IST)

குஜராத் என்ன பாகிஸ்தானிலா இருக்கின்றது? துணை முதல்வர் ஆவேச கேள்வி

Devendra
குஜராத் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது என மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வேதாந்தா மற்றும் ஃபாக்ஸ்கான்  நிறுவனங்கள் இணைந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்கத் திட்டமிட்டிருந்தன. ஆனால் கடைசி நிமிடத்தில் இந்த ஆலை குஜராத்திற்கு சென்றது
 
இதனை அடுத்து எதிர்க்கட்சிகள் மகாராஷ்டிரா அரசு மீது கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குஜராத் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது அதுவும் இந்தியா தான் என்று நிருபர்களிடம் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்ஜாஸ் கூறினார் 
 
செமி கண்டக்டர் நிறுவனத்தை குஜராத்துக்கு மாற்றும் திட்டம் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது என்றும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதை மகாராஷ்டிராவில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்வோம் என்றும் ஆனால் குஜராத்தில் தான் அந்த ஆலை அமையப் போகிறது என்றும் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார் 
 
மேலும் குஜராத் என்பது பாகிஸ்தானில் இல்லை என்றும் குஜராத் மாநிலம் எங்கள் சகோதர மாநிலம் என்றும் இது ஆரோக்கியமான போட்டி தான் என்றும் அவர் தெரிவித்தார்