வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (08:59 IST)

இனிமேல் எந்த தெரு பெயரிலும் சாதி இருக்க கூடாது! – மகாராஷ்டிரா அதிரடி உத்தரவு!

மகாராஷ்டிராவில் சாதி பெயர்களால் வழங்கப்படும் தெருக்களின் பெயரை மாற்றவும், புதிய பெயரை சூட்டவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் மக்கள் வாழும் பல தெருக்களுக்கு அந்த பகுதியில் வசிக்கும் பெரும்பான்மை மக்களின் சாதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவற்றை நீக்கி தெருக்களுக்கு புதிய பெயர் சூட்ட உத்தரவு வெளியாகியுள்ளது.

அதன்படி மராட்டியத்தில் உள்ள மகர் வாடா, பவுத் வாடா, தோர் வாஸ்தி, பிராமன் வாடா, மாலி கல்லி ஆகிய பகுதிகளின் பெயர்களை நீக்கி அதற்கு பதிலான சமதா நகர், பீம் நகர், ஜோதி நகர், சாகு நகர் என பெயரிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள மராட்டிய அமைச்சர் அஸ்லாம் ஷேக் “ஆங்கிலேய ஆட்சி காலத்தில் மக்களை பிரித்தாழ்வதற்காக இதுபோன்ற சாதிய பெயர்கள் வைக்கப்பட்டன. அதனால் அவற்றை நீக்கி அதற்கு பதிலாக தேச தலைவர்கள், விடுதலை போராட்ட வீரர்கள் பெயர் சூட்ட அரசு முடிவெடுத்துள்ளது. இது மக்களிடையையே சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும்” என கூறியுள்ளார்.