செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (05:32 IST)

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல். 10-ல் 8ஐ கைப்பற்றிய பாஜக

கூட்டணி கட்சிகளாக இருந்த பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் முதல்முறையாக பிரிந்து தனித்தனியாக போட்டியிட்ட தேர்தல் என்பதால் மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல் பெரும் கவனத்தை பெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.



இதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 8-இல் வெற்றி பெற்று பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. ஒரு மாநகராட்சியில் சிவசேனாவும், இன்னொன்றில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் இழுபறியிலும் உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி நாசிக், புனே, பிம்ப்ரி சிஞ்ச்வாட், அமராவதி, உல்லாஸ் நகர், அகோலா, நாகபுரி, சோலாபூர் ஆகிய 8 மாநகராட்சிகளையும், தானே மாநகராட்சியில் சிவசேனை கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

நாசிக்கில் மொத்தமுள்ள 122 தொகுதிகளில் 66 இடங்களையும், புனேவில் உள்ள 162 தொகுதிகளில் 100 இடங்களையும் பாஜக கைப்பற்றி மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சி தங்கள் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. அதேபோல் பிம்ப்ரி சிஞ்ச்வாடில் உள்ள 128 தொகுதிகளில் 78 இடங்களை பாஜக கைப்பற்றியது. மேலும் அமராவதியில் (100) 43 தொகுதிகளிலும், உல்லாஸ் நகரில் (78) 33 தொகுதிகளிலும், அகோலாவில் (73) 48 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. நாகபுரியில் (145) 91 இடங்களைக் கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றுள்ளது.

சோலாபூர் மாநகராட்சியைப் பொருத்தவரை, அங்குள்ள 102 தொகுதிகளில் 49 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதில், சிவசேனை 21 இடங்களையும், காங்கிரஸ் 11 இடங்களையும் கைப்பற்றின. தேசியவாத காங்கிரஸ் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது.