மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் செல்லதுரை நியமனம் ரத்து!

Last Updated: வியாழன், 14 ஜூன் 2018 (13:50 IST)
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாகவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு இரண்டாண்டுக்கு மேலாகவும், அண்ணா பல்கலைக்கழத்திற்கு ஓராண்டுகள் மேலாகவும் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டாமல் இருந்தது. 
 
இதனையடுத்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரையும் நியமனம் செய்யப்பட்டனர். 
ஆனால், இந்த நியமந்த்தை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. 
 
அதன்படி, மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் செல்லதுரையின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய தேர்வுகுழுவை நியமித்து துணைவேந்தரை தெர்வு செய்யும் படி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :