செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (13:50 IST)

மகளின் திருமணத்திற்கு சேர்த்த பணம்; ஆக்ஸிஜனுக்காக அளித்த விவசாயி!

மத்திய பிரதேசத்தில் தனது மகள் திருமணத்திற்காக சேமித்து வைத்த பணத்தை விவசாயி ஒருவர் ஆக்ஸிஜன் இன்றி சிரமப்படுபவர்களுக்காக கொடுத்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் நீமுச் மாவட்டத்தை சேர்ந்தவர் சம்பலால் குர்ஜார். விவசாயியான இவர் தனது மகளின் திருமணத்திற்காக 2 லட்சம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஆக்ஸிஜனுக்காக சிரமப்படுவதை கண்ட அவர் மகளின் திருமணத்தை ஆடம்பரமின்றி நடத்தியதுடன், தான் சேர்த்து வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெற நன்கொடையாக அளித்துள்ளார்.

சம்பலால் குர்ஜார் இந்த 2 லட்ச ரூபாய்க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் மயங் அகர்வாலிடம் அளித்துள்ளார். இதன் மூலம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு 2 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும் எனக் கூறப்படுகிறது.