1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:40 IST)

ஹாலிவுட் படத்தை விட கம்மி பட்ஜெட்! சாதனை நாயகன் சந்திரயான் – 3!

Chandrayaan 3
இன்று உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் சந்திரயான் – 3 திட்டம் ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்க ஆகும் செலவை விட குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?



இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் உள்ள பல விஞ்ஞானிகளால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வரும் நாள் இன்று. ஆம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது சந்திரயான் – 3 திட்டம் மூலம் நிலவில் கால் பதிக்க போகும் நாள் இன்று.

நிலவில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல வல்லரசு நாடுகள் கால் பதித்து எவ்வளவோ ஆய்வுகள் செய்திருந்தாலும், இதுவரை எந்த வல்லரசு நாடுகளாலும் கால் வைக்க முடியாத நிலவின் தென் துருவத்தில் தன் முதல் காலடியை வைத்து வரலாறு படைக்க உள்ளது இந்தியா. சமீபத்தில் இந்தியாவிற்கு முன்னதாக தென் துருவத்தில் கால் வைக்க ரஷ்யா ஏவிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது.

இத்தனைக்கும் லூனா 25 விண்கலத்திற்கு ஆன செலவை விட சந்திரயான் – 3 திட்டத்தின் செலவும் மிகவும் குறைவு. அவ்வளவு ஏன் ஹாலிவுட் படத்தை விட சந்திரயான் – 3 திட்டத்தின் செலவு மிகக் குறைவு. சந்திரயான் – 3 திட்டத்திற்காக இஸ்ரோ செலவு செய்துள்ள மொத்த தொகை 615 கோடி. அதாவது 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான இண்டெஸ்டெல்லார் படத்திற்கான பட்ஜெட் சுமார் 165 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கிட்டத்தட்ட சந்திரயான் – 3 பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகம். ஆனால் எளிமையான அறிவியல் யுத்திகளையும், கூட்டு உழைப்பையும் செலுத்தி இந்த குறைந்த பட்ஜெட்டில் வல்லரசு நாடுகளுக்கு இணையான சாதனையை படைத்துள்ளனர் நம்நாட்டு விஞ்ஞானிகள்.

Edit by Prasanth.K