வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 11 நவம்பர் 2021 (16:05 IST)

நாசி வழியே செலுத்தக்கூடிய பூஸ்டர்?

கோவேக்சினை தயாரித்த பாரத் பயோடெக் பூஸ்டர் தடுப்பூசி குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.   
 
பல நாடுகளில் இரண்டு டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவதால் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் கோவேக்சினை தயாரித்த பாரத் பயோடெக் பூஸ்டர் தடுப்பூசி குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில் கொரோனாவுக்கு எதிராக 2 வது டோஸ் தடுப்பூசி போட்டு 6 மாதங்களான பின்னர் பூஸ்டர் தடுப்பூசி போடுவது சிறந்தது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பொறுத்தமட்டில், கோவேக்சினை காட்டிலும் நாசி வழியே செலுத்தக்கூடியது நலமாக இருக்கும். 
 
ஒட்டுமொத்த உலகமும் நாசி வழியாக செலுத்தக்கூடிய தடுப்பூசிக்காக காத்திருக்கிறது. கோவேக்சினை முதல் டோசாக தந்து விட்டு, இரண்டாவது டோசாக நாசி வழியாக செலுத்துகிற தடுப்பூசியை தருவது குறித்து ஆசோதித்து வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.