1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 22 ஆகஸ்ட் 2018 (14:25 IST)

இவ்வளவு களோபரத்திலும் இத்தனை பொறுமையா: வியக்க வைக்கும் புகைப்படம்!

தென்மேற்கு பருவமழை கேரளாவை புரட்டிப்போட்டது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கேரளா தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. 
 
வெள்ள நீர் வடிய துவங்கியுள்ளதால், பொது மக்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்து குடியேற துவங்கியுள்ளனர். ஏடிஎம், பெட்ரோல் பங்குகள், மொபைல் நெட்வொர்க் சேவைகள் அனைத்தும் இயல்பாக செயல்பட துவங்கியுள்ளன. 
 
இந்நிலையில், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பு சுமார் 2 கிமீ வரை அமைதியாய் வரிசையில் நிற்கும் கேரள மக்கள் வியப்பை கொடுத்துள்ளனர். யாரும் முந்தி அடித்துக்கொள்ளாமல், பொறுமையாக செயல்படுவது வியப்பை அளிக்கிறது. 
 
இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கேரள மக்களின் இந்த ஒழுக்கமான நடைமுறைகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.