வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2023 (14:11 IST)

அமித்ஷா பதவி விலக வேண்டும்.. எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு..!

New Parliament
பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடிகள் இருந்ததை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று மக்களவையில்  அமலில் ஈடுபட்டதை அடுத்து இரண்டு மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பாராளுமன்றத்தில் இருந்த பாதுகாப்பு குறைவுபாட்டுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். 
 
மக்களவைக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு மக்களவை செயலகத்தின் கீழ் இருப்பதாக தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்களை சமாதானப்படுத்தினார். 
 
இருப்பினும் தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இரண்டு மணி வரை மக்களவை ஒத்திவைக்கபப்ட்டது. இந்த நிலையில் பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணமாக இருந்தால் 8 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து மக்களவைச் செயலகம் உத்தரவு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva