யப்பா.. நான் காட்டுக்கு ராஜா.. சும்மா இருங்க! – சிங்கத்துக்கே போக்கு காட்டிய நாய்குட்டிகள்!
காட்டு விலங்குகளை கண்டாலே மக்கள் பீதியடைந்து ஓடும் நிலையில் நாய்க்குட்டிகள் சிங்கத்திடம் சென்று விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
காட்டு விலங்குகள் என்றாலே அபாயமானவை என்று பார்த்தே பழக்கப்பட்ட நிலையில் அவ்வப்போது அதிசயமான சில நிகழ்வுகளும் நடக்கும். முன்னதாக ரஷ்யாவில் புலி ஒன்று தனக்கு இறையாக வந்த ஆட்டை தாக்காமல் நட்பு பாராட்டியது வைரலான நிலையில் சில ஆண்டுகளில் அந்த புலியே ஆட்டை தாக்கி கொன்ற சம்பவமும் அரங்கேறியது.
தற்போது உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்திடம் நாய்க்குட்டிகள் விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பூங்காவில் கூண்டிற்குள் அடைக்கப்பட்ட ஆண் சிங்கம் ஒன்றிடம் ஓடி செல்லும் நாய்க்குட்டிகள் அதனிடம் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெல்கம் டூ நேச்சர் என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.