ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (09:05 IST)

வேலை முடிந்து திரும்பியபோது தாக்கிய மின்னல்! 7 பேர் பரிதாப பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் விவசாய வேலை செய்தவர்களை மின்னல் தாக்கிய நிலையில் 7 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தென்மேற்கு பருவமழை, வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் சத்தீஸ்கர், மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி மக்கள் பலியாகும் சோகம் தொடர்ந்து வருகிறது. தற்போது அப்படியான சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில் நடந்துள்ளது.

 

அப்பகுதியில் உள்ள மோதரா கிராமத்தை சேர்ந்த சிலர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த மரத்திற்கு கீழ் மக்கள் ஒதுங்கியுள்ளனர். அப்போது மின்னல் ஒன்று மரத்தை தாக்கிய நிலையில், மின்னலால் தாக்கப்பட்டு 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள்.

 

மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Edit by Prasanth.K