1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (15:34 IST)

யாகூப் மேமன் தூக்கு: அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளியாக கருதப்பட்ட யாகூப் மேமன் நேற்று [30-07-15] வியாழக்கிழமை அதிகாலை தூக்கிலிடப்பட்டார். இதுகுறித்து என்ன சொல்கிறார்கள் மற்றவர்கள்?
 

 
நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ:
 
இந்திய சமுதாயத்தை வகுப்புவாதம் பெருமளவு சூழ்ந்துவிட்டது. அந்த மதவாத அபாயம் இந்தியாவின் கிராமப்புறங்களிலும் வேகமாக பரவி வருகிறது என்பதைதெரிவித்துக் கொள்கிறேன். யாகூப் மேமன் அத்தியாயத்தில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. எனவே அவருக்கு அளிக்கப்பட்ட தண்டணை மிகவும் அபத்தமானது என்பதே என்னுடைய கருத்து.
 
பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி:
 
நீதிபதிகள் அவர்கள் தங்களுடைய பணியை செய்து முடித்துள்ளனர். இந்த செயல்பாட்டால், நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்க இரண்டு தசாப்தங்கள் (20 ஆண்டுகள்) அவகாசம் கிடைத்தது. மேலும், அவர் குற்றவாளி என்றூ நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதயதுல் முஸ்லீம் தலைவர் அசாடுதின் ஓவைசி:
 
அரசாங்கம் இதே போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் மரண தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.
 
து.ராஜா (சிபிஐஎம்):
 
இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது; கண்ணுக்கு கண் என்பது இந்திய நீதித்துறையின் தத்துவமாக இருக்க கூடாது; மரண தண்டனைக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது; ஆனால் பா.ஜ.க.வின் கொள்கைகள் வேறு விதமாக உள்ளது.
 
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:
 
மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு தனது கருத்தை எடுத்துக் கூற பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. உலக வரலாற்றில் முதல் முறையாக நாட்டின் உயர்ந்த நீதிமன்றமான உச்சநீதிமன்றம் நள்ளிரவில் கூடி விசாரித்து இருக்கிறது.
 
தூக்கிலிடப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் கருணை மனுக்கள் அனுப்பவும் அவகாசம் அளிக்கப்பட்டது. இது போன்ற யாரும் செய்தது கிடையாது. அதுபோல் யாகூப் மேமனுக்கும் அனைத்து வகையிலும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷன்:

எனது பார்வையில், யாகூப்புக்கு தூக்கு நிறைவேற்றப்பட்ட தினம் இந்திய ஜனநாயகத்திற்கும், நீதித்துறைக்கும் ஒரு மோசமான நாளாக நான் கருதுகிறேன். யாகூப் மேமன் தாக்கல் செய்த புதிய மனுவை ஏற்று நள்ளிரவில் விசாரணை நடத்தியதை நான் பாராட்டுகிறேன். ஆனால் அதே வேளையில் யாகூப்புக்கு வழங்கப்பட்ட முடிவை நீதிக்கு ஏற்பட்ட கருச்சிதைவாகவே நான் கருதுகிறேன்

பாமக நிறுவனம் ராமதாஸ்:

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டிக்கத்தக்கது. யாகூப் மேனனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: அவரது கடைசி மனுவை உச்சநீதிமன்றம் ஆழ்ந்து ஆய்வு செய்திருக்க வேண்டும்
 
தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் அடக்க நாளில் ஒருவரை தூக்கிலிடுவது கலாமுக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி. இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிப்பது தான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.