1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (16:39 IST)

தந்தைக்கு சிறுநீரக தானம் தருகிறார் லாலு பிரசாத் யாதவ் மகள்!

Lalu Prasad yadav
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடந்த சில மாதங்களாக உடல் நலம் இன்றி இருக்கும் நிலையில் அவருக்கு அவரது மகளே சிறுநீரக தானம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு சிறுநீரக கோளாறு இருந்து வருவதை அடுத்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர் 
 
இந்த நிலையில் தனது தந்தை லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு அவரது மகள் ரோகினி சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
தற்போது கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள லாலு பிரசாத் யாதவுக்கு எப்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran