வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 18 மார்ச் 2018 (10:18 IST)

ஊழல் வழக்கில் சிக்கிய லாலு பிரசாத்திற்கு உடல் நலக் குறைவு

ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மீது கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என அறிவித்து, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு ராஞ்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை இதய நோய் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.