வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 21 ஜூன் 2018 (20:36 IST)

ஆணையத்திற்காக காத்திருக்க முடியாது: காவிரி விவகாரத்தில் குமாரசாமி அதிரடி!

நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், இன்னும் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரவில்லை. காவிரி வாரிய தலைவர் அறிவிக்கப்பட்டு, தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்பும், கர்நாடக அரசு தனது தரப்பு உறுப்பினர்களை அறிவிக்காமல் உள்ளது.
 
இன்னும் வாரியம் செயல்படுத்தப்படாமல் உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அதிகமாக மழை காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 
 
இந்நிலையில் காவிரி ஆணையம் முழுமையாக அமைக்கப்பட்டு செயல்படுவதற்காக காத்திருக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 
 
அதோடு, காவிரி வாரியம் எப்போதும் முதல் கூட்டத்தை தொடங்கும் எனவும் தெரியாது. தமிழகத்திற்கு போதுமான நீரை திறந்து விட்டுள்ளோம். இதுவரை திறந்துவிடப்பட்டே நீரே போதுமானதாக இருக்கும். கர்நாடக விவசாயிகளுக்குத் தேவையான நீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.