ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 மார்ச் 2019 (14:57 IST)

வேட்பாளர் கிடைக்காததால் தொகுதியை திருப்பி கொடுத்த முதலமைச்சர்

கர்நாடக மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி, பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட தங்களிடம் வேட்பாளர்கள் இல்லை என்பதால் காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை கர்நாடக முதல்வர் குமாரசாமி  திருப்பி அளித்து விட்டார்.
 
காங்கிரஸ் கூட்டணியில் 8 தொகுதிகளை பெற்ற மஜத கட்சி, பெங்களூரு வடக்கு தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்காததால் இந்தத் தொகுதியில் நீங்களே வேட்பாளரைத் தேர்வு செய்துகொள்ளுங்கள் என்று காங்கிரஸ் கட்சியிடம் திருப்பி ஒப்படைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகாவில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி தேதி என்பதால் இது இரண்டு கட்சி வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் முதல்வரின் இந்த முடிவை காங்கிரஸ் வரவேற்றுள்ளது