ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (08:45 IST)

மக்களின் உரிமையை பறிப்பதுதான் ராஜதந்திரமா? ரஜினிக்கு காங்கிரஸ் தலைவர் கேள்வி

காஷ்மீர் பிரச்சனை குறித்தும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் ரஜினிகாந்த் சமீபத்தில் பேசிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினியின் இந்த கருத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு விளக்கம் அளித்தார். காஷ்மீர் என்பது இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்றும் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறையுடன் செயல்பட்ட மத்திய அரசு, அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை நீக்கி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஒரு ராஜதந்திர நடவடிக்கை என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார் 
 
ரஜினி இந்த கருத்துக்கும் ஒரு சில அரசியல்வாதிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கேஎஸ் அழகிரி தெரிவிக்கும் போது 'காஷ்மீர் மாநிலத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உரிமையை பறிப்பது தான் ராஜதந்திரமா? என்று கேள்வி எழுப்பியதோடு ரஜினியின் வார்த்தை தனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததாகவும் தெரிவித்தார் 
 
காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கவுள்ளதை அம்மாநில மக்களே பெரும்பாலானோர் வரவேற்ற நிலையில், சமீபத்தில் பக்ரீத் மட்டும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களும் அங்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. காஷ்மீர் மக்களே இந்த விஷயத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் எதிர்ப்பது முரணான செயல் என்று சமூக வலைதள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்