1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 ஏப்ரல் 2018 (16:50 IST)

காவிரி மேலாண்மை வாரியம்: பிரதமருக்கு கிரண்பேடி கடிதம்

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி காவிரி மேலாண்மை அமைக்க சமந்தப்பட்ட துறைக்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
 
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் போராட்டகளமாக மாறியுள்ளது.
 
இந்நிலையில், காவிரி மேலாண்மை அமைக்க நரேந்திர மோடிக்கு கிரண் பேடி கடிதம் எழுதியுள்ளார், அதில் தமிழகத்தில் இருந்து 7 டிஎம்சி தண்ணீர் புதுச்சேரியை சேர்ந்த காரைக்கால் பகுதிக்கு அவசியம் தேவை. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு எப்படி காவிரி நீர் அவசியமோ அதேபோன்று தமிழகத்தில் இருந்து காரைக்கால் பகுதிக்கு 7 டி.எம்.சி காவிரி நீர் மிக அவசியம் என்றார்.