Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவுக்கு எதிராக கங்கணம் கட்டி களத்தில் குதித்த ரூபாவுக்கு கிரண் பேடி வாழ்த்து!

சசிகலாவுக்கு எதிராக கங்கணம் கட்டி களத்தில் குதித்த ரூபாவுக்கு கிரண் பேடி வாழ்த்து!


Caston| Last Updated: வெள்ளி, 14 ஜூலை 2017 (17:07 IST)
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் தனி சமையலறை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுவதாக கூறி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ள ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி வாழ்த்து கூறியுள்ளார்.

 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை பெற்று, தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு, தனி சமையலறை உட்பட பல வசதிகளை சிறைத்துறை டிஜிபி சத்தியநாரயணா செய்து கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
 
இதற்காக 2 கோடி ரூபாய் வரை பணம் கை மாறியுள்ளது என சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் தெரிவித்து அது தொடர்பான அறிக்கையை அவர் கர்நாடக மாநில டிஜிபி தத்தாவுக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தமிழகம் மற்றும் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இதனையடுத்து செய்திகளில் டிஐஜி ரூபாவின் பெயர் தான் அடிபடுகிறது. அவரது துணிச்சலை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரி ஆளுநரும், பாஜகவை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண் பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் ரூபாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

வலுவாக சென்று கொண்டிருக்கும் உங்களை எங்கு பணிக்கு அமர்த்தினாலும் அப்படியே இருங்கள். இளய சமுதாயத்திற்கு சிறந்த முன்மாதிரியாக நீங்கள் உள்ளீர்கள் என கிரண் பேடி கூறியுள்ளார். இதற்கு ரூபாவும் தனது டுவிட்டரில் கிரண் பேடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :