கே.எப்.சி. உணவு பெட்டியில் மொபைல் சார்ஜர்
கே.எப்.சி. நிறுவனம் வாடிக்கையாலர்களை கவரும் வகையில் உணவு பெட்டியில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி கொண்ட புதிமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளவில் புகழ் பெற்ற சிக்கன் உணவக நிறுவனமான கே.எப்.சி வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் பல்வேறு புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் புதுமையான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. "Watt a Box" என்ற பெயரில் கே.எப்.சி நிறுவனம் உணவு பெட்டியிலேயே மொபைல் ரீசார்ஜ் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முதல்கட்டமாக, மும்பை மற்றும் டெல்லியில் இந்த புதுமையான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள. முக்கியமான நேரங்களில் ஸ்மார்ட் போன்கள் சார்ஜ் காலியாகும் நிலையில் சாப்பிடும் போதே மொபைலை சார்ஜ் செய்யும் வகையில் அந்த புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் கே.எப்.சி இன்னும் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.