திருநங்கையை திருமணம் செய்த திருநம்பி! – கேரளாவில் குவியும் வாழ்த்து!
கேரளாவில் நேற்று காதலர் தினத்தில் திருநங்கை – திருநம்பி இடையே நடந்த திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நேற்று பிப்ரவரி 14ல் உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் மூன்றாம் பாலினத்தவரான இருவருக்கு நடந்த திருமணம் பெரும் வைரலாகியுள்ளது.
திருநம்பியான மனு கார்த்திகா என்பவரும், திருநங்கை சியாமா பிரபா என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலர் தினமான நேற்று இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவரின் இந்த திருமணத்தை பலரும் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர். இந்த திருமணத்தை மூன்றாம் பாலினத்தவருக்கு இடையேயான திருமணமாக பதிவு செய்ய வேண்டும் என கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.