1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2016 (16:20 IST)

சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை: கேரளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை: கேரளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

கேரளாவில் மட்டுமல்லாமால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் பெண் தொழிலதிபர் சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது கேரளா நீதிமன்றம்.


 
 
கடந்த 2013-ஆம் ஆண்டு கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் உள்ளிட்ட சிலர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
 
இந்த மோசடியில் அப்போது முதல்வராக இருந்த உம்மண் சாண்டிக்கும் மேலும் சில அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார் சரிதா நாயர். ஊழல் குற்றச்சாட்டு மட்டுமல்லாது செக்ஸ் குற்றச்சாட்டுகள் கூட இந்த வழக்கில் இடம்பெற்றது.
 
இதனால் அப்போது முதல்வராக இருந்த உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சரிதா நாயர் மீது இது தொடர்பான வழக்குகள் திருவனந்தபுரம், பெரும்பாவூர், கோவை உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் உள்ளன.
 
இதில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் சரிதா நாயருக்கும் அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டு சிறைத் தண்டனை தற்போது விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரிதா நாயர் மீதான சோலார் பேனல் மோசடி வழக்கில் தற்போது வந்திருப்பது முதலாவது தீர்ப்பாகும். இன்னும் சில நீதிமன்றங்களில் இவர் மீது இதே வழக்குகள் நிலுவையில் உள்ளன.