செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (10:35 IST)

கொரோனா பயத்தில் தற்கொலை செய்து கொண்ட 149 பேர்! – கேரளாவில் அதிர்ச்சி!

கேரளாவில் கொரோனா பாதித்த பலர் மரண பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தோன்றிய இரண்டாவது அலையில் பாதிப்புகள் அதிகமானது. தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது குறைந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் மற்றும் பலி குறித்து விளக்கமளித்த கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் “கேரளாவில் இதுவரை 41 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர். 149 நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.