செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (13:19 IST)

மூட நம்பிக்கையால் மீண்டும் கொடூரம்! – மகனை பலி கொடுத்த தாய்!

கேரளாவில் மூட நம்பிக்கையால் தாயே தனது மகனை பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மூட நம்பிக்கையால் பெற்றோர்  ஒருவர் தனது இரண்டு மகள்களை பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதேபோன்றதொரு சம்பவம் கேரளாவிலும் நடைபெற்றுள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சஹீதா என்ற பெண் தனது 6 வயது மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சஹீதாவை கைது செய்து விசாரிக்கையில், தனது மகனை பலியிடுமாறு கடவுளின் குரல் கேட்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.

தொடர்ந்து இதுபோல கடவுள் சொன்னதாக பலியிடப்படும் சம்பவம் நடந்து வருவது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.