வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2024 (07:47 IST)

ராகுல் காந்தி உண்மையில் நேரு பேரன் தானா? டிஎன்ஏ டெஸ்ட் செய்ய வேண்டும்: கேரள எம்எல்ஏ சர்ச்சை

rahul gandhi
ராகுல் காந்தி உண்மையில் நேரு பேரன் தானா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றும் அவருடைய டிஎன்ஏவை சோதனை செய்ய வேண்டும் என்றும் கேரள எம்எல்ஏ சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ், இடதுசாரி மற்றும் பாஜக மும்முனை போட்டு ஏற்பட்டுள்ளது.. ஆனால் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் கேரளாவில் உள்ள நீலம்பூர் என்ற தொகுதி எம்எல்ஏ பிவி அன்வர் பேசிய போது நேரு குடும்பத்தில் இருந்து இப்படி ஒரு நபரா என்று ராகுல் காந்தியை பார்த்து தான் ஆச்சரியப்படுவதாகவும் நேரு குடும்பத்தில் பிறந்தவர்கள் இப்படி பேச மாட்டார்கள், எனவே ராகுல் காந்தி உண்மையில் நேருவின் பேரன் தான என்று சந்தேகம் இருக்கிறது என்றும் ராகுல் காந்திக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்

ஜவஹர்லால் நேருவின் பேரன் என்று சொல்லிக் கொள்ள ராகுல் காந்திக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் பாஜகவின் ஏஜென்ட் ஆக தான் அவர் இருக்கிறாரோ என்று தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

பிவி அன்வரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கோட்சேவின் தோட்டாக்களை விட அன்வரின் பேச்சு மோசமாக இருக்கிறது என்று கேரள மாநில காங்கிரஸ் கட்சி அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Edited by Siva