செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (19:52 IST)

மனைவியை ஊருக்கு அனுப்பி விட்டு வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது

வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது
கேரளாவைச் சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் தம் மனைவியை தனது அவரது அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு வீட்டில் சாராயம் காய்ச்சியதால் வெளிவந்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்டார் 
 
கேரளாவைச் சேர்ந்த சந்திரலால் என்ற நபர் மதுவுக்கு அடிமையாகி விட்டதாக தெரிகிறது இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு உத்தரவு காரணமாக மது கடைகள் அடைக்கப்பட்டதால் அவர் சில நாட்கள் கள்ள மார்க்கெட்டில் மது வாங்கி குடித்துள்ளார். தற்போது கள்ள மார்க்கெட்டிலும் சரக்கு தீர்ந்து விட்டதை அடுத்து வீட்டிலேயே சாராயம் காய்ச்ச முடிவு செய்தார் 
 
இதனை அடுத்து அவரது மனைவியையும் குழந்தையையும் அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டு யூடியூபில் சாராயம் காய்ச்சுவது எப்படி என்று வீடியோவை பார்த்து அதன்படி வீட்டிலேயே சாராயம் காய்ச்சி உள்ளார். அவர் சாராயம் காய்ச்சியதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு வாடை அடித்தது. இதனையடுத்து அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் போலீசார் அதிரடியாக அந்த நபரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது