செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2022 (11:50 IST)

சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி இல்லை: திடீரென உத்தரவை வாபஸ் பெற்ற கேரளா அரசு!

kerala
சபரிமலையில் பெண்களும் வழிபடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதி உண்டு என கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதி இல்லை என கேரள அரசு தனது உத்தரவை வாபஸ் பெற்று உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சபரிமலையில் ஆண்டாண்டு காலமாக 10 வயது முதல் 50 வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டு வருகிறது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
 
இந்த நிலையில் கேரள அரசு சமீபத்தில் அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் வழிபடலாம் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் இந்த உத்தரவுக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதால் தற்போது திடீரென கேரள அரசு தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது 
 
இதனால் சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva