1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (18:13 IST)

அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தும் ஆளுனர்: தீவிரமாகும் மோதல்!

kerala goverrnor
கேரள அமைச்சரை பதவியில் இருந்து நீக்க கேரள ஆளுனர் வலியுறுத்தியுள்ளதால் கேரள அரசுக்கும் ஆளுனருக்குமான மோதல் தீவிரமாகியுள்ளது. 
 
கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க கேரள அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் வலியுறுத்தியுள்ளார். தமது ஒப்புதலை அமைச்சர் பாலகோபால் இழந்துவிட்டதாக கூறி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. 
 
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் பிரச்னையில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்ட நிலையில்,  உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு கேரளத்தைப் புரிந்துகொள்ள முடியாது என அமைச்சர் பாலகோபால் பேசியுள்ளார்!
 
இதனையடுத்து அமைச்சர் பாலகோபால் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய ஆளுரநின் நடவடிக்கையால் அவருக்கும் ஆட்சிக்கும் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது!
 
Edited by Mahendran