திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2023 (08:11 IST)

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்!

கேரளாவின் முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 79.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் ஜெர்மனியில் அதற்காக சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு அவர் பேசும் திறனை 90 சதவீதம் அளவுக்கு இழந்தார். இதையடுத்து கடந்த பிப்ரவரியில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல்நிலை மோசமானதை அடுத்து பெங்களூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது காலமாகியுள்ளார். கேரளாவில் அதிக ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவர் உம்மன் சாண்டி. இரண்டு முறை காங்கிரஸ் சார்பாக முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.